பாஜக ஆட்சியில் கடன் மோசடியாளர்கள் எண்ணிக்கை இருமடங்கு அதிகரிப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியின் கீழ் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியின் கீழ் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டதாவது:
நாட்டிலுள்ள வங்கிகள் சீரழிந்துவிட்டன. வங்கிக் கடன்களை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் இருமடங்கு அதிகரித்துள்ளது. 5090ஆக இருந்த இந்த எண்ணிக்கை, தற்போது 11,000ஆக அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அரசு வெளியேறுகையில், வங்கிகளில் வாங்கித் திருப்பிச் செலுத்தப்படாத கடன்களின் மதிப்பு ரூ.1.21 லட்சம் கோடியாக இருக்கும். இது கடந்த 5 ஆண்டுகளில் 308 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
வங்கிகளில் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கிக்கு (ஆர்பிஐ) உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 26-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியலை ஆர்பிஐ வெளியிட வேண்டும் என்று கடந்த மாதம் 28-ஆம் தேதி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com