மே 6-இல் விடைபெறுகிறது ஐஎன்எஸ் ரஞ்சித்!

இந்தியக் கடற்படையில் 36 ஆண்டுகாலமாகப் பணியாற்றிய ஐஎன்எஸ் ரஞ்சித் போர்க் கப்பல், வரும் 6-ஆம் தேதியுடன் ஓய்வுபெறுகிறது.
மே 6-இல் விடைபெறுகிறது ஐஎன்எஸ் ரஞ்சித்!


இந்தியக் கடற்படையில் 36 ஆண்டுகாலமாகப் பணியாற்றிய ஐஎன்எஸ் ரஞ்சித் போர்க் கப்பல், வரும் 6-ஆம் தேதியுடன் ஓய்வுபெறுகிறது.
முந்தைய ஒருங்கிணைந்த ரஷியாவில் கடந்த 1977-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் ரஞ்சித் போர்க் கப்பலானது, கடந்த 1983-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. கடந்த 36 ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்புக்குப் பெரிதும் பங்காற்றி வந்த ஐஎன்எஸ் ரஞ்சித் போர்க் கப்பல் ஓய்வுபெறுவது குறித்து, இந்தியக் கடற்படை சார்பில் வெளியிடப்பட்ட குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
எதிரிநாட்டு ஏவுகணையைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ஐஎன்எஸ் ரஞ்சித் போர்க் கப்பல், வரும் 6-ஆம் தேதியுடன் இந்தியக் கடற்படைப் பணியில் இருந்து விடைபெறுகிறது. இந்தச் சிறப்புவாய்ந்த நிகழ்ச்சி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலுள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநரும், இந்தியக் கடற்படை அட்மிரலுமான தேவேந்திர குமார் ஜோஷி தலைமையேற்க உள்ளார். ஐஎன்எஸ் ரஞ்சித் போர்க் கப்பலில் பணியாற்றிய அதிகாரிகளும், பணியாளர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
ஐஎன்எஸ் ரஞ்சித் போர்க் கப்பலானது, இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுக் கடற்படைப் பயிற்சியிலும், இந்தியா-ரஷியா இடையே கடந்த 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுக் கடற்படைப் பயிற்சியிலும் பங்கேற்றிருந்தது.
கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரிடர் மீட்புப் பணிகளின்போதும், புயல் மீட்புப் பணிகளின்போதும் ஐஎன்எஸ் ரஞ்சித் கப்பல் பயன்படுத்தப்பட்டது. அதன் சேவையைப் பாராட்டி, கடந்த 2003-04 மற்றும் 2009-10 ஆம் ஆண்டுகளில் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com