சுடச்சுட

  

  நடிகைகளுக்கு மட்டுமே தேர்தலில் வாய்ப்பளிக்கிறது திரிணமூல்: பாஜக பெண் எம்.பி.கடும் சாடல்

  By DIN  |   Published on : 05th May 2019 02:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  MEENAKSHILAKI_copy

  "திரிணமூல் காங்கிரஸில் வங்கத் திரைப்பட நடிகைகளுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து வரும் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதாக சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளக்கூடாது' என பாஜகவை சேர்ந்த பெண் எம்.பி. மீனாட்சி லேகி கடுமையாக சாடியுள்ளார்.
   புது தில்லி மக்களவை தொகுதியில் மீண்டும் பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ள மீனாட்சி லேகி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   திரிணமூல் காங்கிரஸ் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் திறமை வாய்ந்த மகளிரை தேர்ந்தெடுத்து பொது வாழ்வில் ஈடுபட வாய்ப்பளிக்க வேண்டும்.
   தில்லியில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களான 164 பேரில் 18 பேர் மட்டுமே பெண்கள்.
   பெண்கள் அதிக அளவில், ஆர்வத்துடன் அரசியலில் ஈடுபட வேண்டும். அவர்களை ஊக்குவிக்க அரசியல் கட்சிகளும் அதிக வாய்ப்புகளை அளிக்க வேண்டும்.
   திரிணமூல் காங்கிரûஸ பொருத்தவரை நடிகைகளுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுகிறது. கிராமப்புற மகளிரும், சாதாரண பெண்களும் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் என்று அக்கட்சி கருதுகிறது.
   இதனை "பெண்களுக்கு அதிகாரமளித்தல்' என்று கருதி விட முடியாது. எனவே, திரிணமூல் காங்கிரஸ் இனிமேல் பிரபலங்களுக்கு மட்டுமே வாய்ப்பளிப்பது என்ற மாயையில் இருந்து வெளியே வர வேண்டும்.
   பாஜகவில் கூட ஜெயபிரதா மற்றும் ஹேமமாலினி போன்ற பெண் நடிகைகள் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், அவர்கள் ஏற்கனவே அரசியலில் சாதித்து தங்களை நிரூபித்து காட்டி விட்டனர்.
   நடிகைகள் மட்டுமல்ல, எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களும் அரசியலில் ஈடுபடலாம். மேலும், நடிகைகள் அரசியலில் ஈடுபட்டப்பின், அவர்கள் சார்ந்த கட்சியின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் களப் பணியாற்றிட வேண்டும்.
   பெண்கள் அரசியலில் ஈடுபடும்போது, அவர்களை ஊக்குவிக்கவும், ஏற்றுக்கொள்ளவும் இந்த சமுதாயம் முன்வர வேண்டும். அதேசமயம், அரசியலில் ஈடுபடும் மகளிருக்கு பொருளாதார பின்புலமும், குடும்பத்தினரின் ஊக்குவிப்பும் கட்டாயம் தேவைப்படுகிறது.
   எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் மகளிருக்கு அதிகளவிலான வாய்ப்புகளை அளிக்க முன்வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai