60 ஆண்டுகளாக லடாக் பகுதியை புறக்கணித்த காங்கிரஸ்

கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியை புறக்கணித்து விட்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.
60 ஆண்டுகளாக லடாக் பகுதியை புறக்கணித்த காங்கிரஸ்

கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியை புறக்கணித்து விட்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.
 லடாக் மக்களவைத் தொகுதியில் வரும் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது, பாஜக வேட்பாளரை ஆதரித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
 ஹிமாசலப் பிரதேசத்தில் இருந்து லே வரையிலும் அனைத்து சீதோஷ்ண நிலையிலும் செயல்படக்கூடிய ரயில்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், லே பகுதியில் ஏற்கனவே மிகப்பெரிய சூரிய மின் சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு, அங்கு உற்பத்தியாகும் சூரிய மின்சக்தியை இந்த பிராந்தியத்தில் மட்டுமின்றி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 ரயில்பாதை அமைக்கும் பணி, சூரியமின்சக்தி பூங்கா போன்ற புதிய வளர்ச்சித்திட்டங்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடங்கியுள்ளது. ஆனால், நாட்டை 60 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த காங்கிரஸ் கட்சி லடாக் பகுதியில் எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தையும் மேற்கொள்ளாமல் புறக்கணித்து விட்டது.
 வடகிழக்கு மாநிலங்களிலும் பிரதமர் மோடியின் உத்தரவின்பேரில், அடிக்கடி மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளில் அக்கறை செலுத்தி வருகின்றனர்.
 ஆனால், இதற்கு முன்பு காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அப்பகுதிகளை முற்றிலும் புறக்கணித்து விட்டது.
 ஆனால், மோடி தலைமையிலான மத்திய அரசு லடாக் பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக பல சிறப்பு நிதிகளை வழங்கியுள்ளது. லடாக் பல்கலைக்கழகம், லே மருத்துவக் கல்லூரி, லே விமான நிலைய விரிவாக்கம், ஜோஹிலா சுரங்கப்பாதை போன்ற பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தது என்று பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com