மோடி மீதான மேலும் ஒரு புகார்: நெறிமீறல் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் அளித்த மேலும் ஒரு புகாரில், அவர் தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் அளித்த மேலும் ஒரு புகாரில், அவர் தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 இத்துடன் பிரதமர் மோடிக்கு எதிரான 6 புகார்களை தேர்தல் ஆணையம் விசாரித்து, தள்ளுபடி செய்துள்ளது. 6 புகார்களிலும், மோடி நெறிகளை மீறவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 மக்களவைத் தேர்தலையொட்டி, குஜராத் மாநிலம், பதான் நகரில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசுகையில், பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்த்தமானை அந்நாட்டு அரசு பத்திரமாக விடுவிப்பதற்கு தாம் மேற்கொண்ட முயற்சிகளே காரணம் என்று கூறியிருந்தார். அபிந்தனை பத்திரமாக விடுவிக்காவிட்டால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானை தாம் எச்சரித்ததாகவும் மோடி கூறியிருந்தார்.
 இதையடுத்து, அவர் தேர்தல் நடத்தை நெறிகளை மீறிவிட்டதாகக் கூறி, தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாரளித்திருந்தது.
 அந்தப் புகாரின் அடிப்படையில், மோடியின் உரையை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், அவர் நடத்தை நெறிகளை மீறவில்லை என்று சனிக்கிழமை தெரிவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com