சுடச்சுட

  

  இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்கள் காஷ்மீர் வந்ததற்கான ஆதாரமில்லை: மாநில காவல்துறை

  By DIN  |   Published on : 06th May 2019 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இலங்கையில் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள், ஜம்மு-காஷ்மீருக்கு வந்து சென்றதற்கான ஆதாரமில்லை என்று அந்த மாநில காவல்துறை தலைவர் தில்பக் சிங் தெரிவித்துள்ளார்.
   இலங்கையில் கடந்த மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின்போது கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர். இத்தாக்குதலில் பெண் உள்ளிட்ட 9 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் ஈடுபட்டனர். உலகையே உலுக்கிய இந்த பயங்கரவாத சம்பவத்தில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
   இதனிடையே, இலங்கையில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கேரளம், பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றதாகவும், அப்போது அங்கு பயங்கரவாத பயிற்சி பெற்றிருக்கலாம் என்றும் இலங்கை ராணுவ தளபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.
   இதுகுறித்து ஸ்ரீநகரில் பிடிஐ செய்தியாளருக்கு பேட்டியளித்த ஜம்மு-காஷ்மீர் மாநில காவல்துறை தலைவர் தில்பக் சிங்கிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
   இதுதொடர்பாக இலங்கையிடம் இருந்து இதுவரையிலும் எந்த தகவலும், ஜம்மு-காஷ்மீர் காவல்துறைக்கு வரவில்லை. அதேநேரத்தில், குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாக சமூக ஊடகத்தில் பெயர்கள் வெளியாகியுள்ள நபர்கள் யாரும், காஷ்மீருக்கு வரவில்லை.
   இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, அதில் தொடர்புடையவர்களாக கூறப்படும் நபர்கள், ஜம்மு-காஷ்மீருக்கு வந்தனரா? என்பதை அறிய குடியேற்ற ஆவணங்களை மாநில காவல்துறை ஆய்வு செய்தது. அதில் ஜம்மு-காஷ்மீருக்கு பயங்கரவாதிகள் வந்து சென்றதற்கான எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்றார் அவர்.
   அதேநேரத்தில் மத்திய விசாரணை அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், "காஷ்மீருக்கு நிகழாண்டில் ஏராளமான இலங்கைவாசிகள் வந்து சென்றுள்ளனர். இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர்கள், காஷ்மீருக்கு வந்து சென்றது தொடர்பாக அந்நாட்டு அரசு ஆதாரம் எதையும் அளித்தால், உண்மை நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்படும்' என்றார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai