5-ம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: 10 மணி நிலவரப்படி 12.65%

நாடுமுழுவதும் 17வது மக்களவைக்கான 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 7 மாநிலங்கள்
5-ம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: 10 மணி நிலவரப்படி 12.65%


 
புதுடில்லி : நாடுமுழுவதும் 17வது மக்களவைக்கான 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 7 மாநிலங்கள் மொத்தம் 51 தொகுதிகளுக்கு நடக்கும் இந்த தேர்தலில், காலை முதல் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது.

மக்களவைக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று உத்தரப் பிரதேசம் (14), ராஜஸ்தான் (12), மேற்கு வங்கம் (7), மத்தியப் பிரதேசம் (7), பிகார் (5), ஜார்க்கண்ட் (4), ஜம்மு-காஷ்மீர் (2) ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இன்று நடைபெற்று வரும் 5-ஆம் கட்டத் தேர்தலில் 674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 8.75 கோடி பேர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். அவர்களில் 4.63 கோடி பேர் ஆண்கள்; 4.12 கோடி பேர் பெண்கள் ஆவர். 

இந்நிலையில், 51 தொகுதிகளில் காலை 10 மணி நிலவரப்படியான பதிவான வாக்குப்பதிவு நிலவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிகார் 11.51% ஜம்மு & காஷ்மீர், 1.36% மத்திய பிரதேசம் 13.18% ராஜஸ்தான் 14%. மேற்குவங்கம் 16.56%, உத்தரபிரதேசம் 9.85%, ஜார்கண்ட் 13.46% என மொத்தம் 12.65% வாக்குப்பதிவு நடந்துள்ளது.

Voting percentage till 10 am: Bihar-11.51, J&K-1.36, Madhya Pradesh-13.18, Rajasthan-14, UP- 9.85, West Bengal-16.56, Jharkhand-13.46.  Total-12.65% 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com