சந்திரசேகர ராவ், பினராயி விஜயன் இன்று 'திடீர்' சந்திப்பு

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சந்திரசேகர ராவ், பினராயி விஜயன் இன்று 'திடீர்' சந்திப்பு

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கேரள முதல்வர் பினராயி விஜயனை திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த பிரதமர் தொடர்பான பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. பாஜக தரப்பில் மீண்டும் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள போதும், காங்கிரஸ் தரப்பில் ராகுலை இதுவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை.

மேலும் மாநில கட்சிகள் இணைந்து 3-ஆவது அணி அமைத்து மத்தியில் ஆட்சியமைக்கவும் திட்டமிட்டுள்ளன. அவற்றில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், கேரளாவில் எதிர் துருவங்களாகவே உள்ளன. அதுமட்டுமல்லாமல் காங். தலைவர் ராகுல், அமேதி மட்டுமல்லாது கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதனால் இவ்விரு கட்சிகள் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில், சந்திரசேகர ராவ் மற்றும் பினராயி விஜயன் இடையிலான அரசியல் ரீதியிலான இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன்பின்னர் தமிழகம் வரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஹைதராபாத் திரும்புகிறார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com