சுடச்சுட

  
  Mahendra Singh Dhoni cast vote

   

  நாடு முழுவதும் உள்ள 51 மக்களவைத் தொகுதிகளுக்கான 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

  இதில், உத்தரப் பிரதேசம் (14), ராஜஸ்தான் (12), மேற்கு வங்கம் (7), மத்தியப் பிரதேசம் (7), பிகார் (5), ஜார்க்கண்ட் (4), ஜம்மு-காஷ்மீர் (2) ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

  ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் உள்ள ஜவஹர் வித்யா மந்திர் வாக்குச்சாவடியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, மனைவி சாக்ஷி ஆகியோர் வாக்களித்தனர், 

  இந்நிலையில், எனது தந்தையைப் போன்று நீங்களும் சென்று கட்டாயம் வாக்களியுங்கள் என்று தோனியின் மகள் ஸிவா வலியுறுத்தியுள்ளார். இந்த விடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது. 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai