தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடியது காங்கிரஸ்: ஆதாரங்கள் கை கொடுக்குமா?

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் மோடி மற்றும் அமித் ஷா மீதான புகார்கள் மீது ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்குத் தொடர்ந்துள்ளது.
தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடியது காங்கிரஸ்: ஆதாரங்கள் கை கொடுக்குமா?

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் மோடி மற்றும் அமித் ஷா மீதான புகார்கள் மீது ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்குத் தொடர்ந்துள்ளது.

பிரதமர் மோடி மற்றும் பாஜக தாலைவர்  அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் எந்தவிதமன புகார் கொடுத்தாலும், அதற்கு தேர்தல் ஆணையம், இது சட்ட விதி மீறல் இல்லை என்று கடந்த சில வாரங்களாக விளக்கம் அளித்து வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அமித் ஷா பேசிய அதே விஷயத்தை மற்றொரு நபர் பேசியிருக்கிறார். ஆனால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அதே சமயம் அமித் ஷா தேர்தல் நடத்தை விதிகளை மீற வில்லை என்று தேர்தல் ஆணையம் பச்சைக் கொடி காட்டியிருக்கிறது என்றும் சில உறுதியான ஆதாரங்களை காங்கிரஸ் முன் வைத்துள்ளது.

எனினும் தேர்தல் தொடர்பான விஷயங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுத்துவிடும். ஆனால் இந்த விஷயத்தில் சில ஆதாரங்களை காங்கிரஸ் முன் வைத்திருப்பதால் உச்ச நீதிமன்றம் கை கொடுக்குமா? கை விரிக்குமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com