கட்சிரோலி நக்ஸல் தாக்குதல்; விசாரணை இரு தினங்களில் நிறைவடையும்: போலீஸார் தகவல்

மகாராஷ்டிரத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான விசாரணை இன்னும் இரண்டு தினங்களில் நிறைவடையும் என போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

மகாராஷ்டிரத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான விசாரணை இன்னும் இரண்டு தினங்களில் நிறைவடையும் என போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
 மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம் ஜம்புர்ஹேதா பகுதியில், கடந்த 1ஆம் தேதி அதிரடிப்படை போலீஸாரின் வாகனம் வந்தபோது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை நக்ஸலைட்டுகள் வெடிக்கச் செய்தனர். இதில் 15 அதிரடிப்படை போலீஸார், கிராமவாசி ஒருவர் என மொத்தம் 16 பேர் பலியாகினர்.
 இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்னும் இரண்டு தினங்களில் விசாரணை நிறைவடையும் என்று தெரிவித்தனர்.
 விசாரணை குறித்து மாவட்ட எஸ்.பி.சைலேஷ் பல்காவ்டே ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
 நக்ஸலைட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த அதிக அளவிலான தனிப்படைக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக புரடா காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டு, மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் முக்கிய நபரான மிலிந்த் தெல்தும்டே மற்றும் பாஸ்கர் ஹிச்கானி உள்ளிட்ட 40 நக்ஸல்கள் தேடப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.
 தெல்தும்டே ஏற்கெனவே, புணே அருகே பீமா கோரேகான் பகுதியில் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற வன்முறை தாக்குதலில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com