ஜூலை 1-லிருந்து அமர்நாத் யாத்திரை: எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தெற்கு காஷ்மீரில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்வதற்கான புனித யாத்திரை வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி தொடங்குகிறது.
ஜூலை 1-லிருந்து அமர்நாத் யாத்திரை: எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தெற்கு காஷ்மீரில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்வதற்கான புனித யாத்திரை வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி தொடங்குகிறது.
 அதையடுத்து, எல்லைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
 இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
 அமர்நாத் கோயிலுக்கான யாத்திரை, வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி தொடங்கி, ரக்ஷா பந்தன் பண்டிகையான ஆகஸ்ட் 15-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
 அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தின் பல்டால் ஆகிய இரு பாதைகள் வழியாக யாத்ரீகள் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்கள். இந்த 46 நாள் யாத்திரையில் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுப்பதற்காக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
 இதுதொடர்பாக, போலீஸார், ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய ஆயுத காவல் படை ஆகியவை ஜம்முவில் சந்தித்து ஆலோசனை நடத்தின.
 ஜம்மு-சம்பா-கதுவா பகுதிக்கான காவல்துறை துணை பொது ஆய்வாளர் சுஜித் குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தங்களது எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ராணுவத்தினரும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பயங்கரவாதம் தொடர்பான உளவுத் தகவல்களை தொடர்ந்து பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
 மேலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலும், சர்வதேச எல்லையிலும் கண்காணிப்பு நிலைகளை அதிகரித்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுத்தப்பட்டது.
 தயார் நிலையை உறுதி செய்து கொள்ளும் வகையில், ஒத்திகைப் பயிற்சிகளை மேற்கொள்ளவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com