திப்பு சுல்தானுக்கு இம்ரான் புகழஞ்சலி: பாஜக-காங்கிரஸ் கருத்து மோதல்

மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் நினைவு தினத்தையொட்டி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழஞ்சலி செலுத்தியிருந்ததை முன்வைத்து, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கருத்து மோதலில் ஈடுபட்டன.

மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் நினைவு தினத்தையொட்டி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழஞ்சலி செலுத்தியிருந்ததை முன்வைத்து, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கருத்து மோதலில் ஈடுபட்டன.
 இம்ரான் கான் சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், "மே 4- திப்பு சுல்தானின் நினைவு தினம். அடிமை வாழ்க்கை வாழ்வதைவிட, சுதந்திரத்துக்காக போரிட்டு, உயிர் துறந்த மனிதர் என்பதால் என்னை மிகவும் கவர்ந்தவர்' என்று குறிப்பிட்டிருந்தார். திப்பு சுல்தானை, இம்ரான் கான் புகழ்வது இது முதல் முறையல்ல. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இம்ரான் பேசியபோதும் திப்பு சுல்தானை புகழ்ந்திருந்தார்.
 இந்நிலையில், இம்ரானின் கருத்தை முன்வைத்து, கர்நாடக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவை பாஜக விமர்சித்துள்ளது. ஏனெனில், கர்நாடகத்தில் திப்பு சுல்தான் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட நடவடிக்கை மேற்கொண்டவர் சித்தராமையா.
 இதுதொடர்பாக, பாஜக எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், "சித்தராமையா அவர்களே, நீங்கள் இம்ரானை கானை ஆரத் தழுவி பாராட்ட வேண்டிய நேரமிது. அப்படி செய்வதால், ராகுல், பிரியங்காவுக்கு பிடித்தவராக நீங்கள் மாற முடியும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
 அவருக்கு, சுட்டுரை மூலமே சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார். அதில், "எதையும் யோசித்து பதிவிடுங்கள். எதிரி நாட்டின் பிரதமருடன் மோடி பிரியாணி சாப்பிட்டதை போல் நான் எதுவும் செய்தேனா? நீங்கள் (ராஜீவ் சந்திரசேகர்), உங்களது தலைவர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக நெறிமுறைகளில் சமரசம் செய்துகொள்வீர்கள். நான் அப்படியல்ல. உங்களைப் போல் கட்சித் தலைவர்களுக்கு அடிமையாக வாழ்வதைவிட திப்பு சுல்தான் போல வாழலாம்' என்று சித்தராமையா பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com