"பானி' புயல்: ஒடிஸாவில் பிரதமர் மோடி ஆய்வு 

புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஸாவுக்கு பல்வேறு மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. சத்தீஸ்கர் அரசு ரூ.11 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது.
"பானி' புயல்: ஒடிஸாவில் பிரதமர் மோடி ஆய்வு 


ஒடிஸாவில் ஃபானி புயலால் பாதிப்பைச் சந்தித்துள்ள பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். 

ஒடிஸாவில் கடந்த வெள்ளிக்கிழமை கரையைக் கடந்த பானி புயல், புரி, குர்தா ஆகிய மாவட்டங்களை புரட்டிப் போட்டது. புரி மாவட்டமும், குர்தா மாவட்டத்தின் ஒரு சில இடங்களும், மிக கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு, உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வரும் அனைத்து குடும்பங்களுக்கும் 50 கிலோ அரிசி, ரூ.2,000 ரொக்கப் பணம், பாலித்தீன் ஷீட்கள் ஆகியவை வழங்கப்படும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

புரி, குர்தா, கஞ்சம், ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பாலாசோர் ஆகிய மாவட்டங்களில் மின்கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 34-ஆக அதிகரித்துள்ளது. 

புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஸாவுக்கு பல்வேறு மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. சத்தீஸ்கர் அரசு ரூ.11 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது. மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தலா ரூ.10 கோடியும், குஜராத் ரூ. 5 கோடியும் அறிவித்துள்ளன.

இந்நிலையில், இன்று திங்கள்கிழமை காலை ஃபானி புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவதற்காக தனி விமானத்தில் புவனேசுவரத்தில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அவரை முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் வரவேற்றனர். 

ஃபானி புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள புரி, குர்தா, கட்டாக், ஜகத்சிங்பூர், ஜஜ்பூர், கேந்திரபாரா, பத்ரக், பாலாசோர் ஆகிய மாவட்டங்களில் மோடி, ஹெலிகாப்டர் அல்லது விமானம் மூலம் சென்று பார்வையிடுகிறார். அதன்பின்னர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மாநில அரசு அதிகாரிகளுடன் மோடி ஆய்வு ஆலோசனை நடத்துகிறார். 

PM Narendra Modi arrives in Bhubaneswar, received by Governor Ganeshi Lal, CM Naveen Patnaik and Union Minister Dharmendra Pradhan. PM would be visiting the Cyclonefani affected areas in the state

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com