சுடச்சுட

  

  காங்கிரஸ் ஆதரவுடன் ஐக்கிய முன்னணி ஆட்சி போல மீண்டும் அமைய வாய்ப்பு: இந்திய கம்யூனிஸ்ட்

  By DIN  |   Published on : 07th May 2019 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sudakar


  மத்தியில் முன்பு காங்கிரஸ் ஆதரவுடன் ஐக்கிய முன்னணி ஆட்சி இருந்தது போல், மீண்டும் அமைய வாய்ப்புள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எஸ். சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக பிடிஐ செய்தியாளருக்கு அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
  மக்களவைத் தேர்தல் முடிவு வெளியான பின்னர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆகிய இரண்டுக்குமே தனிப்பெரும்பான்மை கிடைக்காது. 
  இந்த முறை தொங்கு நாடாளுமன்றம் அமைய வாய்ப்புள்ளதால், காங்கிரஸ் ஆதரவுடன், முன்பு ஐக்கிய முன்னணி ஆட்சியமைத்தது போல, மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புண்டு என்று கூறினார்.
  காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இல்லாமல்,  மாநில கட்சிகளை இணைத்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அமைக்கும் கூட்டணியில் இடதுசாரிகள் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, தேர்தல் முடிவு வெளியான பின்னர்தான் இதுகுறித்து முடிவெடுக்கப்படும். மாநில கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே, சந்திரசேகர் ராவ் உருவாக்க நினைக்கும் கூட்டணி அமைய சாத்தியம். ஆனால் மாநில கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை.
  மாநில கட்சிகளின் கூட்டணியை பொறுத்தவரை, பாஜக அல்லது காங்கிரஸ் கட்சியின் ஆதரவு அவர்களுக்கு தேவைப்படும் அல்லது பாஜக, காங்கிரஸுக்கு மாநில கட்சிகள் ஆதரவளிக்க வேண்டிய நிலையிருக்கும்.  பாஜக அல்லாத அரசை விட காங்கிரஸ் அல்லாத அரசுக்கே சந்திரசேகர் ராவ் முக்கியத்துவம் அளிக்கிறார். நாங்கள் பாஜக அல்லாத அரசுக்கே முக்கியத்துவம் அளிக்கிறோம். பாஜக, காங்கிரஸ் அல்லாத அரசை நாங்கள் எதிர்க்கவில்லை. பாஜக இல்லாமல், காங்கிரஸ் ஆதரவுடன் அமையும் ஆட்சிக்கு நாங்கள் ஆதரவளிப்போம்.
  1996-98 ஆம் ஆண்டுகளில் 13 கட்சிகள் இணைந்து ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்தது. அதற்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்தது. அதுபோல, இந்த முறையும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமையலாம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறலாம். ஆனால் ஆட்சியமைக்கும் அளவுக்கு தனிப்பெரும்பான்மை அந்த கூட்டணிக்கு கிடைக்காது என்றார் சுதாகர் ரெட்டி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai