சுடச்சுட

  

  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான புகார்: விசாரணை அறிக்கையின் நகலை கோரும் பெண் 

  By DIN  |   Published on : 07th May 2019 10:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ranjan-gogai


  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த பெண், இந்த விவகாரம் தொடா்பான விசாரணை அறிக்கையின் நகலை அளிக்கும்படி வலியுறுத்தியுள்ளாா்.

  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது விசாரணை நடத்த நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையில் 3 நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. 

  இதை விசாரித்த விசாரணைக் குழு, புகார் மீது முகாந்திரம் இல்லை என்று கூறி அந்தப் புகாரை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. 

  இந்நிலையில், புகார் அளித்த பெண் ஊழியர் அறிக்கையின் நகலை கோரி நீதிபதி எஸ்.ஏ. போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளாா். 

  அந்த கடிதத்தில் அவர்,

  "விசாரணை நடத்திய நீதிபதிகள் குழுவின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை. இந்த விவகாரம் தொடா்பான விசாரணை அறிக்கையின் நகலை கூட எனக்கு நீதிபதிகள் குழு வழங்கவில்லை. இது, அனைவருக்கும் நீதி என்ற கொள்கைகளை மீறும் செயலாகும்.

  புகாா் தெரிவித்தவா் என்ற முறையில், விசாரணை அறிக்கையை பாா்வையிட எனக்கு உரிமை உள்ளது. புகாருக்கு ஆளான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விசாரணை அறிக்கையின் நகல் அளிக்கப்படுகையில், புகாா்தாரரான எனக்கும் அது அளிக்கப்பட வேண்டியது அவசியம்" என்று குறிப்பிட்டுள்ளாா்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai