சுடச்சுட

  

  தில்லி, கேரளம், உத்தரகண்ட் உயர்நீதிமன்றங்களுக்கு 6 நீதிபதிகள் பரிந்துரை

  By DIN  |   Published on : 07th May 2019 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தில்லி, கேரளம், உத்தரகண்ட் மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்கு 6 பேரின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்பு (நீதிபதிகள் தேர்வு குழு) பரிந்துரை செய்துள்ளது.
  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 3 உறுப்பினர்களைக் கொண்ட உச்சநீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசுக்கு இதுதொடர்பாக பரிந்துரை அளித்துள்ளது. அதில், தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு நீதிபதிகள் தல்வந்த் சிங், ஆஷா மேனன், பிரிஜேஷ் சேதி உள்ளிட்ட 4 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
  உத்தரகண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு நீதிபதி அலோக் குமார் வர்மாவின் பெயரும், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு வழக்குரைஞர் விஜு ஆபிரகாமின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
  வழக்குரைஞர் விஜு ஆபிரகாமின் பெயரை நீதிபதி பதவிக்கு கேரள உயர்நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி பரிந்துரைத்ததாகவும், அதன்மீது உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆய்வு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு மூத்த நீதித்துறை அதிகாரிகள் யாருடைய பெயரையும், தில்லி உயர்நீதிமன்றமும், உத்தரகண்ட் உயர்நீதிமன்றமும் முன்மொழியவில்லை என்றும், அதற்கு அந்த உயர்நீதிமன்றங்கள் தெரிவித்த காரணங்கள் ஏற்கும் வகையில் இருப்பதாகவும் உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்பு தெரிவித்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai