சுடச்சுட

  


  பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்வதற்கு வாராணசி தொகுதியில் சமாஜவாதி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் பிஎஸ்எஃப் வீரர் ரூ.50 கோடி கேட்டு பேரம் பேசுவதாக வீடியோ வெளியாகி இருப்பதால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
  பிரதமர் மோடியைக் கொல்வதற்காக, தேஜ் பகதூர் யாதவ் பேரம் பேசுவது போன்ற விடியோ ஊடகங்களில் திங்கள்கிழமை ஒளிபரப்பாகியது. அந்த விடியோவில், பிரதமர் மோடியைக் கொல்வதற்கு ரூ.50 கோடியை அவர் கேட்பது போலவும், தனக்கு ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-ஏ-தொய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறுவது போல் உள்ளது. ஆனால், அந்த விடியோவின் உண்மைத்தன்மைக்கு ஊடகங்கள் உறுதியளிக்கவில்லை.
  இந்த விடியோ விவகாரம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.எஸ்.எல்.நரசிம்மராவ் கூறியதாவது:
  மோடியைக் கொல்வதற்கு, வாராணசி தொகுதியில் அவரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்தவரின் சதித் திட்டம் தீட்டியது வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு பிரதமரைக் கொல்வதற்கு நகர்ப்புற நக்ஸல்கள் சதித் திட்டம் தீட்டினர். இதை போலீஸார் கண்டறிந்து தெரிவித்தபோது, நக்ஸல்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் பேசினர். அரசியல் எதிரிகள் வன்முறையை கையிலெடுக்கும் அளவுக்கு கீழான நிலைக்குச் சென்றுவிட்டதை அந்த விடியோ காட்டுகிறது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai