அட்சய திருதியை நாளில் இப்படியும் நடக்கலாம்: உஷார்! காவல்துறை எச்சரிக்கை!!

இன்று அட்சய திருதியை நாள். இந்நாளில் எது வாங்கினாலும் அது மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். 
அட்சய திருதியை நாளில் இப்படியும் நடக்கலாம்: உஷார்! காவல்துறை எச்சரிக்கை!!


இன்று அட்சய திருதியை நாள். இந்நாளில் எது வாங்கினாலும் அது மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். 

அதனால்தான் மக்கள் அந்த காலத்தில் அரிசி, பருப்பு, மஞ்சள் என வீட்டுக்குத் தேவையான பொருட்களை இந்நாளில் வாங்குவதும், பிறருக்கு தேவையானவற்றை தானமாக வழங்குவதும் மிகச் சிறந்த விஷயமாகக் கூறப்பட்டது.

ஆனால் இதெல்லாம் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? நகைக் கடைகளில் கடந்த வாரமே அட்சய திரிதியை நாளை முன்னிட்டு நகைகளை வாங்க முன்பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சென்னை, பெங்களூரு என பல நகரங்களில் நேற்று இரவு நகைக் கடைக்குள் நுழைந்த பல பெண்கள் இன்று காலை வரை வெளியே வராமல் கூட்டத்துக்குள் சிக்கியிருக்கும் அளவுக்கு நகைக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில், பெங்களூரு காவல்துறை ஆணையர் டி. சுனீல் குமார் கூறுகையில், நகைக் கடைகள் இருக்கும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரோந்து வாகனங்களையும் நகைக் கடைகளை சுற்றி அவ்வப்போது  ரோந்து வர அறிவுறுத்தியுள்ளோம். சந்தேகப்படும்படி யார் நடமாடினாலும் விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நகைக் கடைகளும், தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளோம். நகைக் கடைகளில் கூடுதலாக தனிப்பட்ட பாதுகாப்புக்கான காவலர்களை நியமித்துக் கொள்ளுமாறும், அவர்களது வாடிக்கையாளர்களுக்கும், வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்கத்துக்கும், அவர்கள் கடையில் இருந்து வாகனங்களுக்குச் செல்லும் போது அவர்களது உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளோம்.

நகைக் கடையில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை தொடர்ந்து கண்காணிக்குமாறும், வாடிக்கையாளர்கள் போல நடித்து நகைத் திருட வரும் கும்பல்கள் மீது விழிப்போடு இருக்குமாறும், யார் மீது சந்தேகம் வந்தாலும் உடனடியாகக் காவல்துறையினரை அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பொதுமக்களுக்கு ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார் சுனீல் குமார். அதாவது, இதுபோன்ற நாட்களில் நகை வாங்கிக் கொண்டோ, நகை வாங்க பணத்தை எடுத்துக் கொண்டோ வருவோரை திசை திருப்ப ரூ.10 அல்லது ரூ.100 தாள்களை சாலையில் வீசி, அது தங்களுடையதா என்று திருடர்கள் கேட்பார்கள், பணத்தை குனிந்து எடுக்கும் போது கையில் இருக்கும் பையை திருடர்கள் பறித்துச் செல்வது வழக்கமாக நடக்கும் சம்பவம். எனவே அதில் கவனமாக இருங்கள்.

நாம் நகை வாங்குவது குறித்து  அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருப்பதும், ஒரு நகை வாங்க கும்பலாக கடைக்கு வருவதையும் தவிர்க்கலாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பல முன்னணி நகைக் கடைகளில் ஏராளமான நகைகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதால் இன்று கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே மக்களே உஷார்..
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com