வாக்கு ஒப்புகைச்சீட்டு முறை: 21 எதிர்கட்சிகளின் மனு உச்ச நீதிமன்றத்தில் 2-ஆவது முறையாக தள்ளுபடி

வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கும் விவகாரத்தில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, 21 எதிர்க்கட்சிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
வாக்கு ஒப்புகைச்சீட்டு முறை: 21 எதிர்கட்சிகளின் மனு உச்ச நீதிமன்றத்தில் 2-ஆவது முறையாக தள்ளுபடி

முன்னதாக, மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 50 சதவீத வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் சரிபார்க்க வேண்டும் என்று கோரி தெலுங்கு தேசம் தலைமையில் 21 எதிர்க்கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடிக்குப் பதிலாக, 5 வாக்குச்சாவடிகளில் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு கடந்த மாதம் 8-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, எதிர்க்கட்சிகளின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீத வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்று கோரப்பட்ட நிலையில், வெறும் 2 சதவீத அளவு வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கூறுவது போதுமானதாக இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மறுஆய்வு மனு மீது அடுத்த வாரம் விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கும் விவகாரத்தில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, 21 எதிர்க்கட்சிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை 2-ஆவது முறையாக தள்ளுபடி செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com