காங்கிரஸுக்கு மோடி சவால்

எஞ்சியுள்ள இரண்டு கட்டத் தேர்தலை, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரைச் சொல்லி காங்கிரஸ் கட்சியால் சந்திக்க முடியுமா என்று பிரதமர் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார்.
காங்கிரஸுக்கு மோடி சவால்


எஞ்சியுள்ள இரண்டு கட்டத் தேர்தலை, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரைச் சொல்லி காங்கிரஸ் கட்சியால் சந்திக்க முடியுமா என்று பிரதமர் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் உள்பட நாட்டின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கத் தயாரா என்று பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மைக் காலமாக சவால் விடுத்து வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக மோடி சவால் விடுத்திருக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலம், சாய்பஸா நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில், இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கடந்த சில தினங்களுக்கு முன் அந்த பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை (ராஜீவ் காந்தி) ஊழலில் முதன்மையானவர் என்று கூறினேன். அடுத்த கணமே சிலர் வயிற்று வலி வந்ததுபோல் கூக்குரலிடத் தொடங்கி விட்டார்கள்.  அவர்கள் இன்னும் சத்தமாகப் பேசினால், 20-ஆம் நூற்றாண்டில் ஒரு குடும்பம் எப்படி இந்த நாட்டைக் கொள்ளை அடித்தது, எப்படி நாட்டை அழித்தது என்பதை இளைய தலைமுறையில் தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
எனவே, மக்களவைக்கு எஞ்சியுள்ள 2 கட்டத் தேர்தல்களை, பஞ்சாப், தில்லி, மத்தியப் பிரதேசத்தின் போபால் ஆகிய இடங்களில் ராஜீவ் காந்தியின் பெயரைச் சொல்லி காங்கிரஸ் கட்சி வாக்கு சேகரிக்கத் தயாரா? போஃபர்ஸ் உள்ளிட்ட காங்கிரஸின் ஊழல்கள் குறித்து விவாதிக்கத் தயாரா? எனது சவாலை காங்கிரஸ் ஏற்கும் என்று நம்புகிறேன்.
கடந்த 70 ஆண்டுகளாக, காங்கிரஸ் கட்சி இந்த நாட்டுக்கு அநீதி இழைத்து விட்டது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுயேச்சை எம்எல்ஏவை (மதுகோடா) இந்த மாநில முதல்வராக்கியது காங்கிரஸ். தற்போது, மக்களவைத் தேர்தலில் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு (மது கோடாவின் மனைவி கீதா கோடா) அக்கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.
போபால் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் மீதான வழக்குகள் குறித்து பாஜக தலைவர்களிடம் ஊடகத்தினர் கேட்கிறார்கள். அவர்கள், காங்கிரஸ் கட்சியின் ஊழல்களை வெளிக்கொணர்ந்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இதேபோல், ஊழல் அரசியல்வாதிகளுடன் (லாலு பிரசாத், மதுகோடா) காங்கிரஸ் நட்பு கொண்டிருப்பதையும் ஊடகங்கள் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com