பாஜகவில் மேலும் ஓர் ஆம் ஆத்மி எம்எல்ஏ

தில்லியில் பிஜ்வாஸன் சட்டப்பேரவைத் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ தேவேந்தர் சிங் ஷெராவத், பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தார். கடந்த சில தினங்களில் பாஜகவில் இணைந்த 2-ஆவது ஆம் ஆத்மி எம்எல்ஏ இவராவார். 
தில்லியில் திங்கள்கிழமை மத்திய இணையமைச்சர் விஜய் கோயல் முன்னிலையில் பாஜகவில் இணைந்த பிஸ்வாசன் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ தேவேந்தர் சிங் ஷெராவத் (இடமிருந்து 2-ஆவது).

குதிரை பேரத்தின் மூலம் லஞ்சம் கொடுத்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை வாங்க முடியாது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பிரதமர் மோடிக்கு கடந்த 3-ஆம் தேதி சவால் விட்டார். அன்றைய தினமே தில்லியின் காந்திநகர் தொகுதி எம்எல்ஏ அனில் பாஜ்பாய் பாஜகவில் இணைந்த நிலையில், தற்போது பிஜ்வாசன் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ தேவேந்தர் சிங் ஷெராவத் பாஜகவில் திங்கள்கிழமை இணைந்துள்ளார். 
மத்திய இணையமைச்சர் விஜய் கோயல் முன்னிலையில் பாஜகவில் இணைந்த தேவேந்தர் சிங் ஷெராவத் பேசியதாவது: ஆம் ஆத்மி கட்சியை ஆரம்பித்தவர்களில் நானும் ஒருவன். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக திட்டமிட்டு என்னை புறக்கணித்து வந்தனர். பலமுறை அவமானத்துக்கு உள்ளானேன். என் மீதுள்ள அதிருப்தியால் எனது தொகுதியை தில்லி அரசு புறக்கணித்தது. கட்சியின் கூட்டங்களுக்குக் கூட அழைப்பு அனுப்பப்படாமல் புறக்கணிக்கப்பட்டேன். ஆம் ஆத்மியில் சர்வாதிகாரம் மேலோங்கியுள்ளது என்றார் அவர். 
மத்திய இணையமைச்சர் விஜய் கோயல் பேசுகையில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை லஞ்சம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை எங்களுக்கில்லை. ஆம் ஆத்மி தலைமையால் அவமானப்படுத்தப்படும் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் சுயவிருப்பத்தின் பேரில்தான் பாஜகவில் இணைகின்றனர் என்றார்.
கேஜரிவால் பதில்: ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான கேஜரிவால் திங்கள்கிழமை கூறுகையில், ரஃபேல் ஒப்பந்தம் மூலம் லஞ்சமாக பல கோடி ரூபாயை பாஜக பெற்றுள்ளது. தற்போது அந்தப் பணத்தை வைத்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை பிரதமர் மோடி விலைக்கு வாங்குகிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com