பிரசாரத்தில் குழந்தைகள்: அகிலேஷ் மீது பாஜக புகார்

தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியதாக, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மீது தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது.


தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியதாக, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மீது தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் அகிலேஷ் யாதவ் மேற்கொண்ட பிரசாரத்தில் இரண்டு சிறார்களை பயன்படுத்தியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பாஜக அளித்த புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
சமாஜவாதி-பகுஜன்சமாஜ் கட்சிகளுக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் 2 சிறார்களை பிரசாரத்துக்கு பயன்படுத்தியுள்ளனர். இது தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறுவதுடன், மனிதநேயமற்ற செயலாகும்.
சுட்டெரிக்கும் வெயிலில், பெரியவர்களே நிற்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர். ஆனால் 2 அப்பாவி சிறுவர்கள் வெயிலில் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். இது சமாஜவாதி மற்றும் பகுஜன்சமாஜ் கட்சியின் மனிதநேயமற்ற எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.
பிரசாரத்தில் சிறார்களை ஈடுபடுத்தியதற்காக, அகிலேஷ் யாதவ் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது குழந்தைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் பாடமாக அமைய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com