சுடச்சுட

  

  அமெரிக்காவின் உயரிய விருதை மகாத்மா காந்திக்கு வழங்க வேண்டும்: அமெரிக்க எம்.பி. வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 08th May 2019 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gandhi


  அஹிம்சையை பின்பற்றி உலகத் தலைவர்களுக்கு முன்மாதிரியாக இருந்த மகாத்மா காந்திக்கு அமெரிக்காவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது அளிக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு பெண் எம்.பி. கரோலின் மலோனே வலியுறுத்தியுள்ளார்.
  மகாத்மா காந்திக்கு அமெரிக்க உயரிய விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தும் மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரோலின் அறிமுகம் செய்தார்.
  இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள சர்வதேச அஹிம்சை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கரோலின் பேசியதாவது:
  மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டை உலக நாடுகள் அனைத்தும் கொண்டாடி வருகின்றன. உலக நாடுகளுக்கு அஹிம்சையின் முக்கியத்துவம் குறித்து தெரியப்படுத்தியவர் காந்தி. வரலாற்றில் அனைவருக்கும் உத்வேகமாக இருப்பவர். 
  உலகின் தலைசிறந்த தலைவர்களும், அஹிம்சையை வலியுறுத்தியவர்களுமான நெல்சன் மண்டேலா, மார்டின் லூதர் கிங் ஆகிய இருவருக்கும் அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் மகாத்மா காந்தியின் அஹிம்சை உள்ளிட்ட கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்தவர்கள்.
  இவ்வாறு உலக தலைவர்களுக்கு உத்வேகமாக இருந்த மகாத்மா காந்திக்கு அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்பட வேண்டும். 
  பிரச்னைகளை கையாள்வதற்கு மகாத்மா காந்தி கற்றுக் கொடுத்த அஹிம்சை வழிகளுக்காக நாம் அனைவரும் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். அவரது 150-ஆவது பிறந்த ஆண்டில் அவருக்கு நாம் அளிக்கும் குறைந்தபட்ச மரியாதையாக இந்த விருது இருக்க வேண்டும். 
  இந்த விருதை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து எம்.பி.க்களும் ஒத்துழைத்தால், மகாத்மாவுக்கு விருது வழங்கும் மசோதாவை நிறைவேற்றி விடலாம்.
  வாழு, வாழ விடு என்பது மகாவீரரின் முக்கிய போதனைகளில் ஒன்று. இது அமெரிக்காவில் உள்ள முக்கிய வாசகங்களில் ஒன்று. 
  இந்தியாவும், அமெரிக்காவும் உலகின் முக்கிய ஜனநாயக நாடுகள். இரு நாடுகளுக்கும் பொதுவாக பல விஷயங்கள் உள்ளன. இரு நாட்டு தலைவர்களையும் முன்மாதிரியாக கொண்டு மக்கள் வாழ்கின்றனர் என்றார் கரோலின்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai