சுடச்சுட

  
  Naxals-killed


  சத்தீஸ்கர் மாநிலத்தின், தாண்டேவாடா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

  சத்தீஸ்கர் மாநிலத்தின், தாண்டேவாடாவில் மாவட்டத்தின் கோண்டேராஜ் வனப்பகுதியில், மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாகக் காவல் துறையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, இன்று காலை 5 மணியளவில் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

  அப்போது, அங்குப் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரைக் கண்டதும், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். பதில் தாக்குதலில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர், 2 மாவோயிஸ்டுகளைச் சுட்டுக் கொன்றனர்.

  மேலும், அவர்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து கைத்துப்பாக்கிகள், 12 பேர் ஆயுதங்கள் மற்றும் கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

  மேலும், கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளை அடையாளம் காணும் பணியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  Dantewada: Bodies of 2 Naxals recovered following an exchange of fire b/w Naxals & joint team of DRG&STF in Gonderas jungle in Aranpur police station area around 5 am today. One INSAS rifle&one 12 Bore weapon with ammunition & other incriminating materials recovered.#Chhattisgarh

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai