சுடச்சுட

  

  தேர்தல் ஆணைய நோட்டீஸ்: கூடுதல் அவகாசம் கோரினார் ராகுல்

  By DIN  |   Published on : 08th May 2019 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ragul4


  மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூடுதல் அவகாசம் கோரியுள்ளார்.
  மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியபோது, பழங்குடியினரை சுட்டுக் கொல்லும் வகையில் புதிய சட்டத்தை மத்தியில் ஆளும் மோடி அரசு கொண்டு வந்திருப்பதாக குறிப்பிட்டார். 
  இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு, ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு மே 7ஆம் தேதி வரை ராகுல் காந்தி முதலில் அவகாசம் கோரினார். இதையேற்று, மே 7ஆம் தேதி வரை ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்தது.
  இந்த அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் முடிந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்திடம் இந்த வார இறுதி வரை தனக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். 
  எனினும், ராகுலுக்கு கூடுதல் அவகாசம் அளிப்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்னமும் முடிவெடுக்கவில்லை.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai