சென்னையில் மழை பெய்யவில்லை; பெங்களூருவில் பெய்தது: ஆனால்? 

சென்னையில் நேற்று மேகக் கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதின. இதோ பெய்துவிடும் என்று நினைத்தருந்த போது வேக வேகமாக நகர்ந்து சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களுக்குச் சென்றுவிட்டன.
சென்னையில் மழை பெய்யவில்லை; பெங்களூருவில் பெய்தது: ஆனால்? 

சென்னையில் நேற்று மேகக் கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதின. இதோ பெய்துவிடும் என்று நினைத்தருந்த போது வேக வேகமாக நகர்ந்து சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களுக்குச் சென்றுவிட்டன.

ஒரு வழியாக மழையே பெய்யாத மற்ற ஏனைய நாட்களைப் போலவே நேற்றும் கடந்து விட்டது. சென்னைவாசிகளும் அப்பாடியோ, சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் போட்டிக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் தப்பித்ததே என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று கன மழை பெய்து நகரத்தையே வெள்ளக்காடாக்கியது. (சென்னைவாசிகள் பொறாமைப்பட வேண்டாம். பொறுமை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு விளைவிக்கும்.)

ஆனால் ஒரு மழை பெய்தாலும் பெய்தது. சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாக்கிச் சென்றது பெங்களூர்வாசிகளை. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். 

தரை காய்ந்து இருந்ததால் லேசான காற்றுக்கே மரங்கள் வேறோடு சாய்ந்தன. அதுமட்டுமா, அவை சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்து அதையும் சேதப்படுத்தின.

பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

அவ்வளவு தானே என்று கேட்பதற்குள், சாலையில்  தேங்கிய தண்ணீர் தாழ்வான பகுதிகளில் இருந்து குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்தது. இந்த திடீர் மழையால் பெங்களூர்வாசிகள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியதுதான் மிச்சம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com