சுடச்சுட

  

  மன்மோகனின் சட்ட ஆவணத்தை கிழித்தெறிந்த அகந்தைக்காரர் ராகுல்: பிரியங்காவுக்கு சுஷ்மா பதிலடி

  By ANI  |   Published on : 08th May 2019 05:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sushma

   

  2013-ல் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது, சட்ட ஆவணத்தை கிழித்தெறிந்த அகந்தைக்காரர் தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் என்று அவருடைய சகோதரி பிரியங்கா வதேரா தெரிவித்த கருத்து தொடர்பாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதிலடி அளித்தார். 

  கடந்த 2013-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரால் ஒப்புதல் வழங்கப்பட்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இயற்றிய சட்ட ஆவணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் கிழத்தெறிந்தது அனைவரும் அறிந்தது தான். அதுதான் அகந்தையின் உச்சகட்டம். எனவே அவருடைய சகோதரி பிரியங்கா கூறி வரும் அகந்தை குறித்து தற்போது தெரிந்திருக்கும் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

  முன்னதாக, ஹரியாணாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, அகந்தையில் உச்சத்தில் இருந்த துரியோதனனுக்கு எந்த நடந்தது என்பதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும் என்று பிரியங்கா வதேரா விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai