சுடச்சுட

  
  VVPAT


  17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு நாள் தாமதமாக மே 24-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வாக்கு ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடின. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் வாக்கு ஒப்புகைச் சீட்டை சரிபார்ப்பதற்கு பதிலாக ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 5 வாக்குச்சாவடிகளில் வாக்கு ஒப்புகைச் சீட்டை சரிபார்க்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி உத்தரவிட்டது.    

  இந்த நிலையில், இந்த புதிய உத்தரவால் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதாவது, மே 23-ஆம் தேதிக்கு பதிலாக மே 24-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

  இந்த தாமதத்திற்கு காரணமாக, வாக்கு ஒப்புகைச் சீட்டை எண்ணி சரிபார்க்கும் பணி 5 முதல் 6 மணி நேரத்துக்கும் மேல் எடுக்கும் என்று கூறப்படுகிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai