திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியில் மே 12-ம் தேதி மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திரிபுரா மாநிலத்தில் மேற்கு திரிபுரா தொகுதியில் மே 12 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியில் மே 12-ம் தேதி மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு


திரிபுரா மாநிலத்தில் மேற்கு திரிபுரா தொகுதியில் மே 12 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

திரிபுரா மாநிலத்தின் மேற்கு திரிபுராவில் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சுமார் 464 வாக்குப்பதிவு மையங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதைத் தடுக்க மத்திய துணை ராணுவப்படையினர் தவறிவிட்டனர். இதுபோன்ற தேர்தல் முறைகேடுகளையும், வன்முறைகளையும் தடுக்க வேண்டும். 

அதற்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள நாளுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 17-ஆம் தேதி வரை பதற்றமுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ரோந்து பணி, அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும். 

தேர்தல் வன்முறை தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வேண்டும். அனைத்து வாக்கு மையங்களும் மத்திய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்படி செய்ய வேண்டும்.  பதற்றமுள்ள வாக்கு மையங்களில் மத்தியப் படை வீரர்கள் அடங்கிய மூன்று வாகனங்களை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
 
கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெற்றதைப் போல அல்லாமல், அங்கீகாரமற்ற வாக்காளர்கள் வரிசையில் நிற்பதை தடுக்க வேண்டும். 464 வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப் பதிவு நடத்தக் கோரி கோரி தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தனர்.  

இந்நிலையில், திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியில் 168 வாக்குப்பதிவு மையங்களில் மே 12 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 12 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Election Commission of India: Polls held on 11th April at 168 polling stations of the Tripura West Parliamentary constituency declared void. Re-polls to be held on 12th May from 7 am to 5 pm.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com