தேர்தல் நடத்தை விதிமுறைகள் பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தாது

தேர்தல் நடத்தை விதிமுறைகளால் பேச்சுரிமையை கட்டுப்படுத்த முடியாது என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். 
தேர்தல் நடத்தை விதிமுறைகள் பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தாது


தேர்தல் நடத்தை விதிமுறைகளால் பேச்சுரிமையை கட்டுப்படுத்த முடியாது என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். 
இதுகுறித்து வலைதளப்பதிவு ஒன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: 
தேர்தல் நடத்தை விதிமுறைகள் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் தேர்தல், பேச்சுரிமை ஆகிய இரண்டும் இணக்கமாக உள்ள விஷயங்களாகும். அரசியலமைப்பு சட்டப் பிரிவு- 324 இன் படி அமைதியான, நேர்மையான முறையில் தேர்தல் நடத்துவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறுகிறது.
தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் இந்த நாட்டிற்காக தியாகம் செய்த ராணுவ வீரர்களை மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும். முக்கியமாக பாகிஸ்தானுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்தி  பதிலடி அளித்த வீரர்களுக்கும், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எதிராக பதிலடி தாக்குதல் நடத்தியவர்களுக்கு உங்கள் வாக்குகளை அர்ப்பணிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். 
இந்த உரையில், மோடி எந்தக் கட்சியையும் குறிப்பிடவில்லை. இதனால்தான் எதிர்க்கட்சிகளின் புகாரை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. 
இதேபோல, கடந்த ஏப்ரல் மாதம் மோடி பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் உரையாற்றியதாக தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்திருந்தன. 
இதை பரிசீலித்த தேர்தல் ஆணையம் மோடி மக்கள் தொகை அதிகரித்து வருவதால் ஏற்படும் போட்டியைத்தான்,  குறிப்பிட்டுள்ளார் என்று கூறி எதிர்க்கட்சிகளின் புகாரை நிராகரித்து விட்டது. 
ஆனால், ராகுல் காந்தி குடும்பத்தினர் மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து பேசி வருகின்றனர். நேர்மையாக வலம் வரும் பிரதமர் மோடியை திருடன் என்று அவர்கள் விமர்சிக்கின்றனர். இதனை யாரும் சரியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com