தோல்வி உறுதி என்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்புகின்றன

தேர்தலில் தோல்வி உறுதி என்பதை தெரிந்து கொண்ட எதிர்க்கட்சிகள், தங்களது தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பலிகடா ஆக்கும் வகையில், அதன் மீது சந்தேகம் எழுப்புகின்றன என்று பாஜக தெரிவித்துள்ளது.
தோல்வி உறுதி என்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்புகின்றன


தேர்தலில் தோல்வி உறுதி என்பதை தெரிந்து கொண்ட எதிர்க்கட்சிகள், தங்களது தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பலிகடா ஆக்கும் வகையில், அதன் மீது சந்தேகம் எழுப்புகின்றன என்று பாஜக தெரிவித்துள்ளது.
வாக்கு ஒப்புகைச்சீட்டு தொடர்பான தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, எதிர்க்கட்சித் தலைவர்கள் 21 பேர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையிலான பாஜக குழுவினர், தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள், தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக 11 புகார்களை பாஜக அளித்துள்ளது. அதில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை கொலை குற்றவாளி என்று தெரிவித்தது, பிரதமர் நரேந்திர மோடியை திருடன் எனத் தெரிவித்தது ஆகியவையும் அடங்கும். ஆனால் அந்த புகார்கள் மீது தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ராகுல் காந்திக்கு எதிரான புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது துரதிருஷ்டவசமானது எனத் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பாஜக தலைவர்கள் பேட்டியளித்தனர். 
அப்போது நக்வி கூறியதாவது:
போரின்போது சரணடையும் ராணுவம் போன்று எதிர்க்கட்சிகள் நிலை உள்ளது. தேர்தலில் தங்களின் முடிவு என்ன என்பதை தெரிந்து கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கும்பல் (எதிர்க்கட்சிகள்) முன்கூட்டியே சரணடைந்துவிட்டது. மே 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்போது, தங்களது தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்க எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com