புதிய ஜாமீன் மனு தாக்கல் செய்ய நீரவ் மோடி முடிவு

லண்டன் நீதிமன்றத்தில் புதிய ஜாமீன் மனுவை புதன்கிழமை தாக்கல் செய்வதற்கு நீரவ் மோடி முடிவு செய்துள்ளார்.
புதிய ஜாமீன் மனு தாக்கல் செய்ய நீரவ் மோடி முடிவு


லண்டன் நீதிமன்றத்தில் புதிய ஜாமீன் மனுவை புதன்கிழமை தாக்கல் செய்வதற்கு நீரவ் மோடி முடிவு செய்துள்ளார்.
இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, லண்டனுக்கு நீரவ் மோடி தப்பிச் சென்று விட்டார். இதைத் தொடர்ந்து, பிரிட்டனில் இருந்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிடும்படி லண்டன் நீதிமன்றத்தில் இந்திய அரசின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்நிலையில், நீரவ் மோடியை கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கைது செய்தனர். 
இதையடுத்து, லண்டனின் தென் மேற்கு பகுதியில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் அளிக்கக்கோரி, நீரவ் மோடி ஏற்கெனவே தாக்கல் செய்த 2 மனுக்களை லண்டனின் வெஸ்ட்மின்ஸ்ட்ர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்நிலையில், அதே நீதிமன்றத்தில் 3ஆவதாக மீண்டும் ஜாமீன் மனுவை தாக்கல் செய்வதற்கு நீரவ் மோடி முடிவு செய்துள்ளார். அந்த மனுவை, தலைமை நீதித்துறை நடுவர் எம்மா அர்புத்நாட் விசாரிப்பார் எனத் தெரிகிறது.  இந்த விசாரணையில், நீரவ் மோடி நேரில் ஆஜராவாரா? அல்லது சிறையில் இருந்தபடி விடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்படுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com