சுடச்சுட

  

  கோவா கடற்பகுதியில் இந்தியா-பிரான்ஸ் கடற்படைகள் கூட்டுப் பயிற்சியை தொடங்கியுள்ளன.
  இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  இந்தியா-பிரான்ஸ் கடற்படைகள் இடையேயான வருணா -2019 பயிற்சி, இந்தாண்டில் கோவாவில் நடைபெறுகிறது. இந்த பயிற்சி கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. வரும் 10ஆம் தேதி வரை இந்த பயிற்சி நடைபெறுகிறது. வருணா-2019ன் ஒரு பகுதியாக, கோவா கடற்பகுதியில் இந்தியா-பிரான்ஸ் கடற்படைகள் இடையேயான பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சி புதன்கிழமை தொடங்கியது. இந்த பயிற்சியில் இந்திய கடற்படை கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்
  ஆகியவற்றுடன் பிரான்ஸ் கடற்படையின் விமானந்தாங்கி கப்பல், நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட கப்பல்கள் பங்கெடுத்துள்ளன என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  இந்தியா-பிரான்ஸ் கடற்படைகள் இடையேயான முதல் பயிற்சி கடந்த 1983ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு கடந்த 2001ஆம் ஆண்டில் வருணா என்று பெயரிடப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai