சுடச்சுட

  

  திக்விஜய் சிங்குக்கு சாதுக்கள் ஆதரவு: ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்பு

  By DIN  |   Published on : 09th May 2019 09:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  digvijay_singh

  மத்தியப் பிரதேச மாநிலம் போபால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் நடத்திய தேர்தல் பேரணியில் நூற்றுக்கணக்கான சாதுக்கள் பங்கேற்று, ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் சென்றனர்.
  இத்தொகுதியில் பாஜக சார்பில் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் களம் காண்கிறார். இதனால், அங்கு கடும் போட்டி நிலவுகிறது. சாத்வி பிரக்யா ஹிந்துத்துவத்தை
  முன்னிறுத்தி பிரசாரம் செய்து வருகிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹிந்து சாதுக்களின் ஆதரவு தனக்கு உண்டு என்பதை நிரூபிக்கும்
  வகையிலும் சாதுக்கள் புடைசூழ ஊர்வலம் நடத்த திக்விஜய் சிங் முடிவு செய்தார்.
  மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசால் அண்மையில் நதிகள் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட கம்ப்யூட்டர் பாபா என்று அழைக்கப்படும் நாம்தேவ் தியாகி, திக்விஜய் சிங்குக்கு உதவ முன்வந்தார். அதன்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சாதுக்கள் போபாலுக்கு புதன்கிழமை
  வரவழைக்கப்பட்டனர். அவர்கள் புடைசூழ திக்விஜய் சிங் போபால் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்றார். பேரணியில் பங்கேற்ற சாதுக்கள், காங்கிரஸ் மற்றும் காவிக் கொடிகளை ஏந்தியபடியும் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தை எழுப்பியபடி சென்றனர்.
  பொதுவாக வட இந்தியாவில் பாஜகவுக்கு ஆதரவாக நடைபெறும் பேரணிகளில்தான் காவிக் கொடிகளும், சாதுக்களும் அதிகம் தென்படுவார்கள். ஆனால், போபாலில் காங்கிரஸுக்கு ஆதரவாக இந்தக் காட்சிகள் அரங்கேறின. 
  மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் தொடர்பாக பிரதமர் மோடிக்கும், அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே கருத்து மோதல்
  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் பேரணியில் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
  இது தொடர்பாக கருத்து தெரிவித்த கம்யூட்டர் பாபா, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவார்கள் என்பதற்காகவே பாஜகவுக்கு ஆதரவு அளித்தோம். கடந்த 5
  ஆண்டுகளில் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத மோடி, இனி எங்களுக்குத் தேவையில்லை என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai