சுடச்சுட

  

  மோடிக்கு எதிராக போட்டியிட்ட பெண் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு

  By DIN  |   Published on : 09th May 2019 10:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குஜராத் சட்டப்பேரவைக்கு கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அப்போதைய முதல்வரான பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மனைவி ஸ்வேதா போலீஸ் பாதுகாப்பு கேட்டு, அந்த மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
  மனுவில் அவர், தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், ஆதலால் தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி காவல்துறை தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
  இந்த மனு, குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சோனியா கோஹானி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்வேதா தாக்கல் செய்துள்ள மனு குறித்து பதிலளிக்கக்கோரி, குஜராத் காவல்துறை தலைவர், ஆமதாபாத் நகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி
  உத்தரவிட்டார்.
  இதைத் தொடர்ந்து, மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
  கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு, அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடியுடன் பல்வேறு விவகாரங்களில் சஞ்சீவ் பட் மோதல் போக்கை
  கடைப்பிடித்தார். இந்நிலையில், பணிக்கு வராத காரணத்துக்காக கடந்த 2011ஆம் ஆண்டு சஞ்சீவ் பட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே, போதை பொருளை பதுக்கி நபர் ஒருவரை போலி வழக்கில் சிக்க வைத்ததாக 1996ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட  வழக்கில் சஞ்சீவ் பட் கடந்த 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai