சுடச்சுட

  

  மோடியை மீண்டும் பிரதமராக்க தேசம் ஒன்றுபட்டு நிற்கிறது

  By DIN  |   Published on : 09th May 2019 10:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  amithsha1

  நமது நாடு பல்வேறு கலாசாரம், மொழி, இனத்தால் வேறுபட்டு இருக்கலாம், ஆனால் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்பதில் தேசமே ஒன்றுபட்டு நிற்கிறது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
  ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத், ஜாம்ஷெட்பூர் ஆகிய இடங்களில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
  இந்தியாவில் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களுக்கும் நான் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விட்டேன். அனைத்து விதமான கலாசாரம், மொழி, இனம் சார்ந்த
  மக்களைச் சந்தித்துவிட்டேன். இந்தியாவில் மக்களிடையே பல்வேறு மொழி, மதம், இனம் சார்ந்த மக்கள் இருந்தாலும் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்பதில் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர்.
  கடந்த இருபது ஆண்டுகளாக ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் தேசத்துக்காக பணியாற்றி வருகிறார் பிரதமர் மோடி. மறுபுறம் கோடைகாலம் தொடங்கிவிட்டால் வெளிநாட்டுக்குச் சுற்றுப் பயணத்தை தொடங்கிவிடுகிறார் ராகுல். இவர்களில் யாரை மக்கள் தேர்வு செய்வார்கள். நிச்சயமாக நாட்டுக்காக
  தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மோடியின் தலைமையைத்தான் மக்கள் விரும்புவார்கள். 55 ஆண்டுகளாக காங்கிரஸால் செய்ய முடியாத பல சாதனைகளை கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு செய்து முடித்துள்ளது.
  இந்தியா இந்தியர்களுக்கு மட்டுமானது என்பதை உறுதி செய்யவே, தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், வாக்கு வங்கி
  அரசியலுக்காக அதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. நமது நாட்டு மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களையும், வழங்கப்படும் மானியங்களையும் வெளிநாட்டில் இருந்து வந்து சட்டவிரோதமாக தங்கியவர்கள் பெறுவதை எப்படி அனுமதிக்க முடியும் என்று அமித் ஷா கேள்வி எழுப்பினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai