சுடச்சுட

  

  அல்வார் கூட்டு பாலியல் வன்கொடுமை: முக்கியக் குற்றவாளி கைது

  By DIN  |   Published on : 09th May 2019 10:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rape


  ராஜஸ்தான் கூட்டு பாலியல் வழக்கில் மேலும் இரண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. 

  இதுதொடர்பாக, ஜெய்ப்பூர் சரக ஐஜிபி எஸ் செங்கதிர் தெரிவிக்கையில், 

  "பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தை நீதிமன்ற மாஜிஸ்திரேட் இன்று (வியாழக்கிழமை) பதிவு செய்தார். மதுராவில் ஹன்ஸ்ராஜ் குர்ஜார் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். முக்கியக் குற்றவாளி சோட்டே லால் பிரக்பூரா பகுதியில் இன்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சோட்டே லால் உட்பட இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.  

  இந்த வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்ட முகேஷ் குர்ஜார், மகேஷ் குர்ஜார், அசோக் குர்ஜார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு மே 13-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்றும், இன்றும் கைது செய்யப்பட்ட ஹன்ஸ்ராஜ் மற்றும் சோட்டே லால் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.  

  வழக்கு விவரம்:

  ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதி ஒரு பெண் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் இருவரையும் ஆளில்லாத இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, கணவரை தாக்குதலுக்குள்ளாக்கி அவரது கண்முன்னே அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

  இந்த சம்பவத்தை முகேஷ் குர்ஜார் என்பவர் படம்பிடித்துள்ளார். மேலும், இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவாமல் இருப்பதற்காக பணம் கேட்டும் அந்த கும்பல் மிரட்டியுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். 

  ஆனால், இதுதொடர்பாக மே 2-ஆம் தேதி தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.   

  இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அம்மாநிலத்தில் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் ஆளும் அரசு இந்த சம்பவத்தை மூடி மறைக்க எண்ணுவதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai