நீட் தேர்வில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியம் இல்லை: பிரகாஷ் ஜாவ்டேகர் 

நீட் தேர்வில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியம் இல்லை என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளார். 
நீட் தேர்வில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியம் இல்லை: பிரகாஷ் ஜாவ்டேகர் 

புது தில்லி: நீட் தேர்வில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியம் இல்லை என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்  தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்துவோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீட் தேர்வில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியம் இல்லை என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்  தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தில்லியில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வியாழனன்று அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

நீட் தேர்வில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியம் இல்லை; அதற்கு வாய்ப்பும் இல்லை.

தற்போது அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளன.

தேர்வு மைங்களில் மாணவர்களிடம் நடத்தப்படும் சோதனை என்பது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டுதலின்படியே செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com