என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களைக் கைவிடுங்கள்: பிரதமர் மோடிக்கு ராபர்ட் வதேரா வேண்டுகோள்

என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களைக் கைவிடுங்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதி பொதுச் செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா வேண்டுகோள் விடுத்துள்ளா

என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களைக் கைவிடுங்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதி பொதுச் செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹரியாணா மாநிலம் குருஷேத்திரம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ராபர்ட் வதேராவை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசிய
பிரதமர் நரேந்திர மோடி, தில்லியிலும், ஹரியாணாவிலும் விவசாயிகளின் நிலங்களைத் திருடியவர்களை பாஜக தலைமையிலான அரசு சிறைக்கு அனுப்பியது.
தன்னை அரசர் என நினைத்துக் கொண்டிருந்தவர்களை, நீதிமன்ற விசாரணைக்கும், அமலாக்கத் துறையின் விசாரணைக்கும் பாஜக அரசு உள்படுத்தியது. உங்கள் ஆசியினால், விவசாயிகளுக்கு நீதி கிடைக்கப் போகிறது. ஊழல் செய்தவர்கள் சிறைக்குச் செல்ல உள்ளனர் என்றார்.
இதையடுத்து, ராபர்ட் வதேரா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், என் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் தொடுப்பதை தயவுசெய்து கைவிடுங்கள்.
இதுபோன்ற கருத்துகள் மூலம், நீதித்துறையை நீங்கள் (பிரதமர் மோடி) அவமதித்து வருகிறீர்கள். நான் நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்.
உண்மை ஒருநாள் அனைவருக்கும் தெரியவரும். இந்த நாட்டை கடவுள் காப்பற்றட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
முகநூலில் வதேரா வெளியிட்ட மற்றொரு பதிவில் குறிப்பிட்டிருந்ததாவது:
நாட்டில் ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, பெண்கள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காணப்படுகின்றன. ஆனால், அவை குறித்து எதுவும் பேசாமல்,
என்னைக் குறித்து மட்டும் நீங்கள் (பிரதமர் மோடி) பேசி வருகிறீர்கள். கடந்த 5 ஆண்டுகளாக பாஜக அரசால் நான் சித்திரவதை செய்யப்பட்டு வருகிறேன்.
இதுவரை அமலாக்கத் துறையினர் 11 முறை என்னிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஒவ்வொரு விசாரணையும் 8 முதல் 11 மணி நேரங்கள் நடைபெற்றன.
அதுவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அந்த விசாரணைகளை நடத்தி என்னை அலைக்கழித்தனர். ஆனால், என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில்
ஒன்று கூட இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com