என்ஆர்சி பதிவேடு: கெடு நீட்டிப்பில்லை

அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) தயாரித்து இறுதிசெய்யும் பணிக்கான கெடுவை (ஜூலை 31) நீட்டிக்க மாட்டோம் என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
என்ஆர்சி பதிவேடு: கெடு நீட்டிப்பில்லை

அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) தயாரித்து இறுதிசெய்யும் பணிக்கான கெடுவை (ஜூலை 31) நீட்டிக்க மாட்டோம் என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான விவகாரம், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி ஆர்.எஃப்.நாரிமன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்
புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, என்ஆர்சி வரைவு பதிவேட்டில் குறிப்பிட்ட சிலரின் பெயர்களைச் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலர், இதுதொடர்பான புகார்களை விசாரிக்கும் குழுவின் முன் ஆஜராவதில்லை. இதனால், பட்டியலைத் தயாரிப்பதற்கு காலதாமதம் ஏற்படுகிறது என்று பட்டியல்
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா கூறினார்.
இதையடுத்து, என்ஆர்சி பதிவேட்டை இறுதி செய்யும் பணிக்கான கெடு, வரும் ஜூலை 31-க்குப் பிறகு நீட்டிக்கப்பட மாட்டாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும், என்ஆர்சி வரைவு பட்டியல் தயாரிப்பு பணியை அவர் சுதந்திரமாக மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் கூறினர். 
அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறி வசிப்பவர்களை அடையாளம் காண்பதற்காக, அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதன் வரைவு பட்டியல் கடந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில், மொத்தமுள்ள 3.29 கோடிப் பேரில் 2.89 கோடிப்பேரின் பெயர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தது. சுமார் 40 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர். அவர்களில் 37,59,630 பேரின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டு விட்டது. 2,48,077 பேரின் பெயர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்கான பணியை என்ஆர்சி பதிவேடு தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா தலைமையிலான குழு மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விடுபட்டவர்களின் பெயர்களை சேர்ப்பதில் அவர்களுக்கு எவ்வித சிரமத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்று பிரதீக் ஹஜேலாவுக்கு கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com