தில்லியில் இரண்டாவது நாளாக பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் விவகாரம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகார் நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக தில்லி கனாட் பிளேஸ் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
தில்லியில் இரண்டாவது நாளாக பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் விவகாரம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகார் நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக தில்லி கனாட் பிளேஸ் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பெண்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். 
நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது முன்னாள் பெண் ஊழியர் அளித்த பாலியல் புகாரில் நடவடிக்கைக்கான முகாந்திரம் இல்லை என்று கூறிய விசாரணைக் குழு, அப்புகாரை திங்கள்கிழமை நிராகரித்தது. இந்நிலையில், இத்தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தலைமை நீதிபதி பதவி விலகக் வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்துக்கு வெளியே பெண் வழக்குரைஞர்கள், ஆர்வலர்கள் பலர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஏராளமான பெண்கள் உள்பட 55 ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 
இந்நிலையில், பாலியல் புகார் விவகாரத்தை கையாண்ட  விஷயத்தில் மேற்கொள்ளப்பட்ட  நடைமுறைகளுக்கு எதிராக கனாட் பிளேஸில் புதன்கிழமை பெண்கள் உள்பட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கனாட்  பிளேஸ் மெட்ரோ ரயில் நிலையத்தின் ஏழாவது நுழைவு வாயில் பகுதியில் பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலர் ஆனி ராஜா தினமணியிடம் புதன்கிழமை கூறியதாவது: 
இந்த விவகாரத்தில் சட்ட  நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன; மறுக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள சட்ட விதிகள் ஏற்றுக் கொள்ளமுடியாதவை; வரும் ஆண்டுகளில் ஒரு மிகப் பெரிய ஆபத்தான தாக்கத்தை ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை உருவாக்கும். 
உயர் பதவிகளில் இருப்போர் பாலியல் விவகாரத்தில் சிக்கினால், பதவி விலகி விசாரணையை எதிர்கொள்வதுதான் சரி. தற்போதைய விவகாரத்தில் புகார் அளித்த பெண்ணின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, விசாரணை முடிவின் அறிக்கையின் நகல் பெறுவது புகார்தாரரின் சட்ட  உரிமையாகும். 
அதுவும் அப்பெண்ணுக்கு வழங்கப்படவில்லை. இதனால், இந்த விவகாரத்தில் சட்ட நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன. அதேபோன்று, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மீதான நடவடிக்கையின் வரம்பில் நீதிபதிகள் வருவதில்லை. அவர்களையும் அதற்குள் கொண்டு வரமாறு நாடாளுமன்றத்தை அணுக யோசித்து வருகிறோம்.  
வரும் நாள்களில் இதுகுறித்து நாட்டில் மிகப் பெரிய விவாதமும் நடைபெற உள்ளது. மேலும், வரும் வெள்ளிக்கிழமை (மே 10)  உச்சநீதிமன்றத்தை நோக்கிப்
பேரணியும்  நடத்தத் திட்டமிட்டப்பட்டுள்ளது என்றார் அவர். 
இப்போராட்டம் குறித்து புது தில்லி காவல் துறையின் துணை ஆணையர் மதுர் வர்மா கூறுகையில், ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். 
ஆனால், கனாட்  பிளேஸில் போராட்டத்தைத் தொடர்ந்ததால் 17 பெண்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு,  மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  பின்னர், அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com