பொருளாதார நிபுணர் வைத்தியநாத் மிஸ்ரா காலமானார்

இந்தியாவைச் சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் வைத்தியநாத் மிஸ்ரா புவனேசுவரத்தில் புதன்கிழமை காலமானார்.
பொருளாதார நிபுணர் வைத்தியநாத் மிஸ்ரா காலமானார்

இந்தியாவைச் சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் வைத்தியநாத் மிஸ்ரா புவனேசுவரத்தில் புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 99. வயது முதிர்வு காரணமாக அவர் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 1949-இல்
கட்டக்கில் உள்ள ரவீண்ஷா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கிய வைத்தியநாத் மிஸ்ரா, ஒடிஸா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக துணை வேந்தராகவும் இருந்துள்ளார். ஒடிஸா மாநிலத் திட்டக்குழு தலைவராக 1985 முதல் 1990 வரை பணியாற்றியுள்ளார்.
கல்வியாளராகவும், பொருளாதார ஆய்வாளராகவும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார். கிராமப் பொருளாதாரம் முதல் சர்வதேச பொருளாதாரம் வரை பல்வேறு சிறந்த ஆய்வுக் கட்டுரைகளையும், புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.
மத்திய அமைச்சர் பிரதான் சுட்டுரையில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒடிஸா மாநிலத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் வைத்தியநாத்
மிஸ்ராவின் பங்கு மிகவும் முக்கியமானது. அவரது இழப்பால் துயரம் கொண்டுள்ள குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் தனது சுட்டுரைப் பக்கத்தில், கல்வியாளரும், பொருளாதார நிபுணருமான வைத்தியநாத் மிஸ்ராவின் மறைவு பெரும்
சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com