சுடச்சுட

  

  அதிமுக எம்எல்ஏ பிரபு மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

  By DIN  |   Published on : 10th May 2019 11:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supreme-court

  அதிமுக எம்எல்ஏ கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

  அமமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு விளக்கம் கேட்டு பேரவைத் தலைவர் ப.தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். 

  இந்த நோட்டீஸ் குறித்து ரத்தின சபாபதியும், கலைச்செல்வனும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, பேரவைத் தலைவரின் உத்தரவுக்கு  தடை பெற்றனர். ஆனால், எம்.எல்.ஏ. பிரபு மட்டும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் அமைதியாக இருந்து வந்தார். 

  இந்த நிலையில், பேரவைத் தலைவர் நோட்டீஸுக்கு தடை விதிக்கக் கோரி எம்எல்ஏ பிரபு உச்சநீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

  அப்போது அதிமுக எம்எல்ஏ கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததோடு இது தொடர்பாக ஜூலை 12ஆம் தேதிக்குள் சபாநாயகர் தனபால் விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai