சுடச்சுட

    

    காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு:  பயங்கரவாதி சுட்டுக்கொலை

    By DIN  |   Published on : 10th May 2019 11:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kashmir

    காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

    காஷ்மீர் மாநிலம், ஷோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

    இதற்கு பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இருத்தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

    மேலும அவனிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai