சுடச்சுட

  

  கேஜரிவால் போன்ற ஒருவர் முதல்வராக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்: கெளதம் கம்பீர் கடும் சாடல்

  By DIN  |   Published on : 10th May 2019 09:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gowtham_gambir

  அரவிந்த் கேஜரிவால் போன்ற ஒருவர் முதல்வராக இருப்பதை நினைத்து வெட்கப்படுவதாக கெளதம் கம்பீர் கடுமையாக சாடியுள்ளார். 

  கிழக்கு தில்லியில் பாஜக சார்பில் பிரபல கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் அதிஷி போட்டியிடுகிறார்.  இந்நிலையில், வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த துணைமுதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவருமான மணீஷ் சிசோடியா, அதிஷி ஆகியோர், "கிழக்கு தில்லியில் அதிஷியை மிக மோசமான வகையில் விமர்சிக்கும் துண்டுப் பிரசுரங்கள் பாஜகவால் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

  இந்த துண்டுப் பிரசுரங்களை கௌதம் கம்பீரே விநியோகித்துள்ளார்' என்றனர். அப்போது அதிஷி கண்ணீர் விட்டு அழுதார். இந்நிலையில், இது தொடர்பாக கேஜரிவால் தனது சுட்டுரையில் "கௌதம் கம்பீர் இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போவார் என நினைக்கவில்லை. இப்படியான மனநிலை உள்ளவர்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பெண்கள் அவர்களிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பை எதிர்பார்க்க முடியும்?' என்று தெரிவித்திருந்தார். 

  இதற்குப் பதிலளிக்கும் வகையில் தனது சுட்டுரையில் கௌதம் கம்பீர் தெரிவித்திருப்பதாவது:  தேர்தல் வெற்றிக்காக சொந்தக் கட்சிப் பெண்ணின் கண்ணியத்தை சிதைக்கும் உங்களது நடவடிக்கையை வெறுக்கிறேன் கேஜரிவால். உங்களுடைய கட்சிச் சின்னமான துடைப்பத்தைக் கொண்டு உங்களது அழுக்கான மனதை யாராவது சுத்தம் செய்ய வேண்டும்.  

  நான்தான் இந்த துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தேன் என இவர்கள் நிரூபித்தால், நான் எனது வேட்புமனுவை வாபஸ் பெறுகிறேன். நிரூபிக்காவிட்டால், கேஜரிவால் அரசியலில் இருந்து விலகுவாரா? கேஜரிவால் போன்ற ஒருவர் முதல்வராக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai