சுடச்சுட

  

  தேர்தல் ஆணைய நோட்டீஸ்: பதிலளிக்க ராகுலுக்கு மீண்டும் அவகாசம்

  By DIN  |   Published on : 10th May 2019 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ragul1


  பழங்குடியினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்திருப்பதாக பேசியது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பதிலளிக்க மீண்டும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
  மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், பழங்குடியினர் மீது துப்பாக்கி சூடு நடத்த அனுமதிக்கும் வகையில், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சட்டம் கொண்டு வந்திருக்கிறது என்றார். 
  தேர்தல் நடத்தை நெறிமுறை விதிகளில், எதிரணியினர் மீது உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள் தெரிவிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, அதுகுறித்து விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடந்த 1ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
  இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையத்திடம் ராகுல் காந்தி கடந்த வெள்ளிக்கிழமை அவகாசம் கோரினார். இதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி பதிலளிக்க மே 7ஆம் தேதி வரை அவகாசம் அளித்தது. இந்த அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்திடம் ராகுல் காந்தி இந்த வார இறுதி வரை தனக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று மீண்டும் கோரினார். இதை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், வெள்ளிக்கிழமை (மே 10) மாலை வரை கூடு
  தல் அவகாசம் அளித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai