சுடச்சுட

  


  ரம்பான் மாவட்டத்தில் நேரிட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலை வியாழக்கிழமை மூடப்பட்டது.
  நாட்டின் பிற பகுதிகளுடன் காஷ்மீரை இணைக்கும் முக்கிய சாலையாக ஜம்மு-காஷ்மீர் இடையேயான நெடுஞ்சாலை திகழ்கிறது. 270 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையில், ரம்பான் மாவட்டம் திக்தோல் பகுதியில் வியாழக்கிழமை நிலச்சரிவு நேரிட்டது. இதனால் அந்தச் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
  இதை கருத்தில் கொண்டு, ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை உடனடியாக மூடப்பட்டது. இதனால் 1,500 கனரக வாகனங்களும், சுமார் 300 இலகு ரக வாகனங்களும், அந்த நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகளில் நடுவழியில் சிக்கியுள்ளன.  அதிலிருக்கும் மக்களும் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
  இதைத் தொடர்ந்து, ரம்பான் மாவட்டத்தில் பொக்லைன் வாகனங்கள் மூலமும், இயந்திரங்கள் மூலமும் நிலச்சரிவை சரி செய்யும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai