சுடச்சுட

  
  kedharnath


  சார்தாம் ஆலயங்களில் ஒன்றான கேதார்நாத் கோயில் வழிபாட்டுக்காக வியாழக்கிழமை திறக்கப்பட்டது. பனிக்காலத்தை முன்னிட்டு ஆறு மாதங்கள் இந்தக் கோயில் மூடப்பட்டிருந்தது.
  இமய மலைத் தொடரில் 3500 மீட்டர் உயரத்தில் மந்தாகினி நதிக்கரையில் அமைந்துள்ளது கேதார்நாத் கோயில். ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு கோயில் நடையை தலைமை பூஜாரி ராவல் பீமாசங்கர் லிங் அதிகாலை 5.35 மணிக்குத் திறந்து வைத்து முதல் பூஜை செய்தார். உத்தரகண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மெளர்யா, மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்ய அங்கு வந்திருந்தனர். கடும் குளிரையும் பொருள்படுத்தாமல், அங்கு வந்திருந்த 2,500 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
  சார்தாம் என்று அறியப்படும் நான்கு முக்கியக் கோயில்களில் கங்கோத்ரி, யமுனோத்ரியில் உள்ள கோயில்கள் ஏற்கெனவே அக்ஷய திருதியை தினமான மே 7-ஆம் தேதி திறக்கப்பட்டன. பத்ரிநாத் ஆலயம் வெள்ளிக்கிழமை திறக்கப்படும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai