கலிகாலத்தில் சிக்கிய இந்திய கலாசாரம்: கூகுள் போட்டு உடைத்தது!

பல்வேறு மொழி, இனத்தைக் கொண்டிருந்தாலும் இந்திய கலாசாரம் என்பதை அண்டை நாடுகளால் மிகவும் விரும்பப்படும் விஷயமாக இருந்து வருகிறது.
கலிகாலத்தில் சிக்கிய இந்திய கலாசாரம்: கூகுள் போட்டு உடைத்தது!

பல்வேறு மொழி, இனத்தைக் கொண்டிருந்தாலும் இந்திய கலாசாரம் என்பதை அண்டை நாடுகளால் மிகவும் விரும்பப்படும் விஷயமாக இருந்து வருகிறது.

பல நாடுகளில் இல்லாத பல நல்ல வாழ்வியல் முறைகளைக் கொண்டிருந்த இந்திய கலாசாரம், தற்போது சீரழிந்து கொண்டிருக்கிறது கண் முன் காணும் விஷயமாகிவிட்டது.

சரி இப்படி புலம்பும் வகையில் என்னதான் ஆகிவிட்டது என்று கேட்கிறீர்களா.. கூகுள் சொல்லியிருக்கிறது அப்படிப்பட்ட விஷயம்தான்.

அதாவது திருமணத்துக்கு அதிக முக்கியத்துவம் தரும் இந்தியாவில், திருமண வரன்களைப் பற்றிய தகவல்களை அளிக்கும் மேட்ரிமோனி இணையதளங்களைத் தேடும் இந்தியர்களை விட ஆன்லைனில் டேட்டிங் வைத்துக் கொள்ளும் இணையதளங்களைத் தேடும் இந்தியர்களே அதிகமாம்.

2017ம் ஆண்டைக் காட்டிலும், 2018ம் ஆண்டில் ஆன்லைன் டேட்டிங் தொடர்பாக இணைதயளங்களைத் தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளது.

2018ம் ஆண்டு ஸ்விக்கி, சோமாட்டோ செயலிகள்கள் வந்ததால், கூகுளில் உணவு பற்றி தேடுவது பல மடங்கு அதிகமானதும் தெரிய வந்துள்ளது.

இதில் மட்டும் இல்லைங்க.. அதிகம் தேடப்பட்ட உணவாக பீட்சா இருப்பதையும் கூகுள் போட்டுடைத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com